حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَوْ دُعِيتُ إِلَى كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ لَقَبِلْتُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் ஆட்டின் குளம்புப் பகுதிக்கு (சமைத்து உண்ண) நான் அழைக்கப்பட்டாலும், நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வேன். ஓர் ஆட்டின் முன்னங்கால் எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன்."
எனக்கு ஓர் ஆட்டுக்கால் அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன்; மேலும் அதற்காக (அதை உண்பதற்காக) நான் அழைக்கப்பட்டாலும் நான் (அவ்வழைப்பை) ஏற்றுக்கொள்வேன்.