இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3525ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ ‏{‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏}‏ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي ‏ ‏ يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ لِبُطُونِ قُرَيْشٍ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"{வ அன்திர் அஷீரத்கல் அக்ரபீன்}" (நபியே! உமது நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக!) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் குறைஷிக் குலங்களை நோக்கி "யா பனீ ஃபிஹ்ர்! யா பனீ அதீ!" என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح