وَعَنْ خَوْلَةَ اَلْأَنْصَارِيَّةَ -رَضِيَ اَللَّهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ إِنَّ رِجَالاً يتخوَّضون فِي مَالِ اَللَّهِ بِغَيْرِ حَقٍّ, فَلَهُمْ اَلنَّارُ يَوْمَ اَلْقِيَامَةِ } أَخْرَجَهُ اَلْبُخَارِيُّ. [1] .
கவ்லா அல்-அன்சாரிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக சில மனிதர்கள் அல்லாஹ்வின் செல்வத்தை (பொது நிதியை, அரசு சொத்தை) முறையற்ற விதத்தில் பயன்படுத்துகிறார்கள்; அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உள்ளது.”
ஆதாரம்: அல்-புகாரி
وعن خولة بنت عامر الأنصاري ، وهي امرأة حمزة رضي الله عنه وعنها، قالت : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن رجالاً يتخوضون في مال الله بغير حق، فلهم النار يوم القيامة ((رواه البخاري)).
கவ்லா பின்த் ஆமிர் அல்அன்சாரி (ரழி) அவர்கள் (ஹம்ஸா (ரழி) அவர்களின் மனைவி ஆவார்கள்) கூறினார்கள்:
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: “நிச்சயமாக சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமின்றி முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மறுமை நாளில் நரக நெருப்புதான் உண்டு.”
அல்-புகாரி