(இதன் பொருள்: பின்னர் அவர் நெருங்கி, இன்னும் அருகே வந்தார்; அதனால் அவர் இரு வில்லுகளின் தூரத்தில் அல்லது அதற்குக் குறைந்த தூரத்தில் இருந்தார். ஆகவே, அவன் (அல்லாஹ்) தன் அடியாருக்கு வஹீ (இறைச்செய்தி)யை அருளினான்; எதை அவன் வஹீயாக அருளினானோ அதை... - அல்குர்ஆன் 53: 8-10)
என்பது பற்றி (தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அது ஜிப்ரீல் (அலை) அவர்களாவார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் (பொதுவாக) மனிதர்களின் உருவத்தில்தான் வருவார். ஆனால், இம்முறை அவர் தமது (உண்மையான) சொந்த உருவத்தில் வந்தார்; (அவரது உருவம்) வானத்தின் அடிவானத்தை மறைத்துவிட்டது."