அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால், ஷைத்தான் பாங்கொலியைக் கேட்காதிருப்பதற்காக சப்தத்துடன் காற்றை வெளிப்படுத்தியவனாகப் புறமுதுகிட்டு ஓடுகிறான். பாங்கு முடிந்துவிட்டால் திரும்பி வருகிறான். இகாமத் சொல்லப்பட்டால் புறமுதுகிட்டு ஓடுகிறான். இகாமத் முடிந்துவிட்டால் திரும்பி வருகிறான். (தொழும்) மனிதனுக்கும் அவனது மனதிற்குமிடையே குறுக்கிட்டு, (தொழுகைக்கு முன்பு) அவர் நினைத்திராத விஷயங்களையெல்லாம், ‘இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்’ என்று கூறுகிறான். இறுதியில் அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதைக் கூட அறியாதவராக ஆகிவிடுகிறார். ஆகவே, உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தெரியாவிட்டால், அவர் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுக்கப்படும்போது, ஷைத்தான் அந்த அழைப்பைக் கேட்காதிருப்பதற்காக அபானவாயுவை வெளியேற்றிக் கொண்டு ஓடுகிறான்; அழைப்பு முடிந்ததும் அவன் திரும்பி வருகிறான். இகாமத் சொல்லப்படும்போதும் அவன் (மீண்டும்) ஓடுகிறான்; இகாமத் முடிந்ததும் அவன் திரும்பி வந்து, ஒரு மனிதனுக்கும் அவனது மனதிற்கும் இடையே குறுக்கிட்டு, 'இன்னின்னதை நினைத்துப் பார், இன்னின்னதை நினைத்துப் பார்' என்று, அவர் (இதற்கு முன்) நினைத்திராதவற்றை நினைவூட்டுகிறான். அதன் விளைவாக, அவர் எவ்வளவு தொழுதார் என்று அவருக்கே தெரியாமல் போய்விடுகிறது. எனவே, உங்களில் எவரேனும் எவ்வளவு தொழுதார் என்பதில் சந்தேகம் கொண்டால், அவர் அமர்ந்தவாறே இரண்டு ஸஜ்தாக்களைச் செய்யட்டும்."