حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ التُّسْتَرِيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ} إِلَى قَوْلِهِ {أُولُو الأَلْبَابِ} قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ، فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ، فَاحْذَرُوهُمْ .
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதினார்கள்: "அவனே உங்களுக்கு இந்த வேதத்தை அருளினான். அதில் (கருத்து) உறுதியான வசனங்கள் உள்ளன; அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (கருத்து) தெளிவற்றவை ஆகும். யாருடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ, அவர்கள் குழப்பத்தை நாடியும், அதன் விளக்கத்தைத் தேடியும், அதில் தெளிவற்றவற்றைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அதன் (உண்மையான) விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள், 'நாங்கள் இதனை நம்புகிறோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்தவை' என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (வேறு யாரும்) படிப்பினை பெற மாட்டார்கள்." (3:7)
(பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதில் தெளிவற்றவற்றைப் பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால், (அறிந்துகொள்ளுங்கள்;) அவர்களையே அல்லாஹ் (இவ்வசனத்தில்) குறிப்பிடுகிறான். ஆகவே, அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்."
“அவன்தான் உமக்கு இவ்வேதத்தை (குர்ஆனை) அருளினான். அதில் முஹ்க்கமாத் (தெளிவான கருத்துடைய) வசனங்களும் உள்ளன; அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை முதஷாபிஹாத் (பல பொருள் தரும்) வசனங்கள் ஆகும். எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள், குழப்பத்தை ஏற்படுத்தவும், (தவறான) விளக்கத்தைத் தேடவும் அதில் முதஷாபிஹாத் (பல பொருள் தரும்) வசனங்களைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதன் (உண்மையான) விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதியானவர்களோ, ‘நாங்கள் இதனை நம்பினோம்; (இவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்தவை’ என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் (இதிலிருந்து) படிப்பினை பெறமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 3:7).
(இதனை ஓதிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(குர்ஆனில்) உள்ள முதஷாபிஹாத் (பல பொருள் தரும்) வசனங்களைப் பின்பற்றுபவர்களை நீங்கள் கண்டால், (அறிந்துகொள்ளுங்கள்) அவர்களையே அல்லாஹ் (இவ்வசனத்தில்) குறிப்பிடுகிறான். ஆகவே, அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.”