அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யார் பொய்யை, அது தவறானது என்பதற்காக (அல்லாஹ்வின் திருப்தியை நாடி) கைவிடுகிறாரோ, அவருக்காக சுவர்க்கத்தின் வெளிப்பகுதியில் ஒரு வீடு கட்டப்படும். யார் தன்பக்கம் நியாயம் இருந்தும் (சண்டையைத் தவிர்ப்பதற்காக) வாக்குவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்காக அதன் நடுப்பகுதியில் ஒரு வீடு கட்டப்படும். மேலும், யார் தனது குணத்தை அழகுபடுத்திக் கொள்கிறாரோ, அவருக்காக அதன் உயர்ந்த பகுதியில் ஒரு வீடு கட்டப்படும்.'