حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரும், அவர் தமக்காக விரும்புவதை தம் (முஸ்லிம்) சகோதரருக்காக விரும்பும் வரையில், ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்."
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும், தாம் தமக்காக விரும்புவதை தம் சகோதரருக்காக" – அல்லது நபி (ஸல்) அவர்கள் "தம் அண்டை வீட்டாருக்காக" என்று கூறினார்கள் – "விரும்பும் வரை, (உண்மையாக) ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்."
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, எந்தவொரு அடியானும் (உண்மையில்) நம்பிக்கை கொண்டவனாக ஆகமாட்டான், அவன் தனக்காக விரும்புவதையே தன் அண்டை வீட்டாருக்காக - அல்லது அவர் (நபி (ஸல்) அவர்கள்) ‘தன் சகோதரனுக்காக’ எனக் கூறினார்கள் – விரும்பும் வரை.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தமக்காக விரும்புவதையே தம் சகோதரருக்காகவும் விரும்பாதவரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்."