இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2657 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ زِيَادِ،
بْنِ إِسْمَاعِيلَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ الْمَخْزُومِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ مُشْرِكُو
قُرَيْشٍ يُخَاصِمُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقَدَرِ فَنَزَلَتْ ‏{‏ يَوْمَ يُسْحَبُونَ فِي
النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ* إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ‏}‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: குறைஷி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விதியைப் பற்றி விவாதிப்பதற்காக வந்தார்கள். அப்போது இவ்வசனம் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது:

"அவர்கள் தங்கள் முகங்கள் குப்புற நரக நெருப்பில் இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரகத் தீயின் தீண்டலைச் சுவையுங்கள்!" நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் திட்டமிட்ட அளவின்படியே படைத்திருக்கிறான்" (அல்குர்ஆன் 54:48).

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح