حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الأَوَّلِينَ وَالآخِرِينَ إِلاَّ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ لاَ تُخْبِرْهُمَا يَا عَلِيُّ مَا دَامَا حَيَّيْنِ .
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அபூபக்ர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும், நபிமார்கள் மற்றும் தூதர்களைத் தவிர, முந்தியவர்களிலும் பிந்தியவர்களிலும் உள்ள சுவர்க்கவாசிகளின் முதிர்ந்தவர்களுக்கு (நடுத்தர வயதுடையவர்களுக்கு) தலைவர்கள் ஆவார்கள். அலீயே! அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கும் வரை இதைப்பற்றி அவர்களிடம் தெரிவிக்காதீர்கள்.''