அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால், அவர் தமது மூக்கை மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்; ஏனெனில், ஷைத்தான் அவரது மூக்கின் உட்பகுதியில் இரவைக் கழிக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவர் உளூ செய்வதற்காக உறக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தனது மூக்கிற்குள் மூன்று முறை தண்ணீர் செலுத்தி அதை வெளியே சிந்தட்டும், ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கின் மேல் இரவைக் கழிக்கிறான்."