அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஹுசைன் (ரழி) என்னைச் சேர்ந்தவர்கள், நான் ஹுசைனைச் சேர்ந்தவன். யார் ஹுசைனை (ரழி) நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். ஹுசைன் (ரழி) அஸ்பாத்துகளில் ஒரு ஸிப்த் ஆவார்கள்." அஸ்பாத் என்பது ஸிப்த் என்பதன் பன்மையாகும்: அதாவது ஒரு பெரிய கோத்திரம். இதன் பொருள், ஹுசைன் (ரழி) அவர்களுக்கு அதிகமான சந்ததிகள் உருவாகி, அவர்கள் ஒரு பெரிய கோத்திரமாக மாறுவார்கள் என்பதாகும். மேலும் இது உண்மையிலேயே நிகழ்ந்துள்ளது. துஹ்பத்துல் அஹ்வதி (4/341) என்ற நூலைப் பார்க்கவும்.