حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ . تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنِ الأَعْمَشِ.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என்னுடைய தோழர்களை ஏசாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுத் மலை அளவுக்குத் தங்கத்தை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்தாலும், அது, அவர்களில் ஒருவர் செலவு செய்த ஒரு 'முத்' அளவுக்கோ அல்லது அதில் பாதியளவுக்கோ கூட ஈடாகாது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள், என்னுடைய தோழர்களைத் திட்டாதீர்கள். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவர் உஹது மலை அளவிற்குத் தங்கம் செலவழித்தாலும், அது என் தோழர்களில் ஒருவர் செலவழித்த ஒரு ‘முத்’ அளவுக்கோ அல்லது அதன் பாதியளவுக்கோ கூட ஈடாகாது.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கும் இடையே சில வாக்குவாதம் ஏற்பட்டது, மேலும் காலித் (ரழி) அவர்கள் அவரை ஏசினார்கள். அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை எவரும் ஏச வேண்டாம். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹது மலை அளவிற்கு தங்கம் செலவு செய்தாலும், அது அவர்களில் ஒருவருடைய ஒரு மத் அல்லது அதன் பாதியளவிற்குக்கூட ஈடாகாது.