حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ وَأَشَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ الإِيمَانُ هَا هُنَا ـ مَرَّتَيْنِ ـ أَلاَ وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ رَبِيعَةَ وَمُضَرَ .
அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் திசை நோக்கித் தமது கையால் சுட்டிக்காட்டி, "ஈமான் (நம்பிக்கை) இதோ இங்கே உள்ளது" என்று இருமுறை கூறினார்கள். "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இரக்கமற்ற தன்மையும், உள்ளங்களின் கடினத் தன்மையும் (ஒட்டகங்களை விரட்ட) கூச்சலிடுபவர்களிடத்தில்தான் உள்ளன; அங்குதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதிக்கின்றன; (அதாவது) ரபிஆ மற்றும் முழர் (ஆகிய குலத்தாரிடம் இக்குணங்கள் உள்ளன)" என்று கூறினார்கள்.
அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தமது கையால் யமன் திசையைச் சுட்டிக்காட்டி, "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஈமான் இங்கே இருக்கிறது. இதயங்களின் கடினத்தன்மையும் இரக்கமற்ற தன்மையும், சாத்தானின் இரு கொம்புகள் உதயமாகும் திசையிலுள்ள, ஒட்டகங்களின் வால்களுக்குப் பின்னால் திரியும் (கூச்சலிடும்) ஒட்டக மேய்ப்பவர்களிடம் இருக்கிறது; அவர்கள் ரபீஆ மற்றும் முதர் குலத்தினர் ஆவர்" என்று கூறினார்கள்.