அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்: "நீங்கள் சேவல் கூவுவதைக் கேட்கும்போது, அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்; ஏனெனில் அது ஒரு வானவரைக் கண்டுள்ளது. மேலும் நீங்கள் கழுதை கத்துவதைக் கேட்கும்போது, ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்; ஏனெனில் அது ஒரு ஷைத்தானைக் கண்டுள்ளது."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் சேவல்கள் கூவுவதைக் கேட்கும்போது, அல்லாஹ்விடம் அவனது அருளை (அருட்கொடைகளை)க் கேளுங்கள். ஏனெனில், அவை ஒரு வானவரைக் கண்டிருக்கின்றன. நீங்கள் கழுதையின் கத்தலைக் கேட்கும்போது, ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில், அது ஒரு ஷைத்தானைக் கண்டிருக்கிறது."
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சேவல்கள் கூவுவதை நீங்கள் கேட்கும்போது, அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள், ஏனெனில், நிச்சயமாக அவை ஒரு வானவரைக் கண்டுள்ளன. ஒரு கழுதை கத்துவதைக் கேட்கும்போது, விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள், ஏனெனில், நிச்சயமாக அது ஒரு ஷைத்தானைக் கண்டுள்ளது.”