இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2674ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، -
يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم قَالَ ‏ ‏ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ
أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ
مِنْ آثَامِهِمْ شَيْئًا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (மக்களை) நேர்வழிக்கு அழைக்கின்றாரோ, அவருக்கு, அதனைப் பின்பற்றியவர்களின் நற்கூலிகளைப் போன்ற நற்கூலி உண்டு; (அவ்வாறு பின்பற்றிய) அவர்களின் நற்கூலிகளில் எதுவும் எந்த விதத்திலும் குறைக்கப்படாது.

மேலும், யார் (மக்களை) வழிகேட்டிற்கு அழைக்கின்றாரோ, அவர் அதனைச் செய்தவர்களின் பாவங்களைப் போன்றே அதன் பாவ(ச் சுமை)யைச் சுமக்க வேண்டியிருக்கும்; (அவ்வாறு செய்த) அவர்களின் பாவங்களில் எதுவும் எந்த விதத்திலும் குறைக்கப்படாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح