அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரேனும், அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி கற்கப்படும் ஒரு கல்வியை (அதாவது, அல்லாஹ்வுக்காகவே கற்கப்பட வேண்டிய மார்க்கக் கல்வியை), இவ்வுலக ஆதாயங்களில் ஏதேனும் ஒன்றை அடைவதற்காக மட்டுமே கற்றால், அவர் மறுமை நாளில் சுவனத்தின் நறுமணத்தைக் கூட நுகரமாட்டார்."