முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாபத்தை வரவழைக்கும் மூன்று விஷயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்: நீர் ஆதாரங்கள் (அல்லது நீர் எடுக்கும் இடங்கள்) உள்ள இடங்களிலும், மக்கள் நடமாடும் பாதைகளிலும், மற்றும் (மக்கள் ஓய்வெடுக்கும்) நிழலிலும் மலஜலம் கழிப்பது.