அம்ர் பின் ஷுஐப் அவர்கள் தனது தந்தை வழியாக தனது பாட்டனார் (ரழி) அவர்கள் அறிவித்ததாகக் கூறினார்கள்:
"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வுளூவைப் பற்றிக் கேட்பதற்காக வந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவி, வுளூ செய்வது எப்படி என்று அவருக்குச் செய்து காட்டினார்கள். பிறகு, 'இதுதான் வுளூ. இதைவிட அதிகமாகச் செய்பவர், தீயதைச் செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார், மற்றும் அநீதி இழைத்துவிட்டார்' என்று கூறினார்கள்."