கதாதாவிடம் பயணத்தில் தயம்மும் செய்வது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் (பதிலளிக்கும் விதமாக), அம்மார் இப்னு யாசிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தயம்மும் செய்யும்போது) முழங்கைகள் வரை (தடவ வேண்டும்)" என்று கூறினார்கள்.