حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا النَّضْرُ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسَلَ إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَجَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَعَلَّنَا أَعْجَلْنَاكَ ". فَقَالَ نَعَمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُعْجِلْتَ أَوْ قُحِطْتَ، فَعَلَيْكَ الْوُضُوءُ ". تَابَعَهُ وَهْبٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَقُلْ غُنْدَرٌ وَيَحْيَى عَنْ شُعْبَةَ الْوُضُوءُ.
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழரை வரவழைத்தார்கள். அவர் தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட வந்தார். நபி (ஸல்) அவர்கள், "ஒருவேளை, நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோமோ?" என்று கேட்டார்கள். அந்த அன்சாரித் தோழர் (ரழி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், "(தாம்பத்திய உறவின்போது) நீங்கள் அவசரப்படுத்தப்பட்டால் அல்லது உங்களுக்கு விந்து வெளிப்படவில்லையென்றால் அப்போது நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்துகொள்ள வேண்டும் (இந்தக் கட்டளை பின்னர் ரத்து செய்யப்பட்டது, அதாவது ஒருவர் குளிக்க வேண்டும்)."
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு மனிதரின் (வீட்டின்) வழியாக கடந்து சென்றார்கள், மேலும் அவரை அழைத்து வர ஆளனுப்பினார்கள். அவர் வெளியே வந்தார், அப்போது அவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இதைக் கண்டதும் அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) கூறினார்கள்: நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும். அவர் கூறினார்: ஆம். அல்லாஹ்வின் தூதரே. அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) கூறினார்கள்: நீங்கள் அவசரப்படுத்தப்பட்டாலோ அல்லது விந்து வெளியாகாவிட்டாலோ, உங்களுக்கு குளிப்பது கடமையில்லை, ஆனால் உளூ செய்வது கட்டாயமாகும். இப்னு பஷ்ஷார் இதை ஒரு சிறிய மாற்றத்துடன் அறிவித்துள்ளார்கள்.