அபூ ஷஃதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது முஅத்தின் பாங்கு சொன்னார். உடனே ஒரு மனிதர் பள்ளிவாசலிலிருந்து எழுந்து நடந்து வெளியேறினார். அவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறும் வரை அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் கண்கள் அவரைப் பின்தொடர்ந்தன. அப்போது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இவர் அபுல் காசிம் (நபி முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்."