அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
நயவஞ்சகர்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகள் இஷாத் தொழுகையும் ஃபஜ்ர் தொழுகையும் ஆகும். அவற்றுக்குரிய (நன்மைகளை) அவர்கள் அறிவார்களானால், தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்திருப்பார்கள். மேலும், தொழுகையை ஆரம்பிக்குமாறு நான் கட்டளையிட்டு, ஒருவரை மக்களுக்கு தொழுகை நடத்துமாறு பணித்து, பின்னர் விறகுக் கட்டைகளை வைத்திருக்கும் சிலருடன் நான் சென்று, (கூட்டுத்) தொழுகைக்கு வராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய வீடுகளை நெருப்பால் கொளுத்திவிட வேண்டும் என்று நான் எண்ணினேன்.