அல் ஹஜ்ஜாஜ் பின் அபீ ஜைனப் அவர்கள் கூறியதாவது:
"அபூ உஸ்மான் அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்க நான் கேட்டேன்: 'நான் தொழுகையில் எனது இடது கையை எனது வலது கையின் மீது வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனது வலது கையைப் பிடித்து அதை எனது இடது கையின் மீது வைத்தார்கள்.'"