ஜாபிர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
உங்களில் எவர் இரவின் இறுதியில் எழ முடியாது என்று அஞ்சுகிறாரோ, அவர் (இரவின் முற்பகுதியிலேயே) வித்ரு தொழுகையை நிறைவேற்றிவிட்டு பின்னர் உறங்கட்டும். மேலும், இரவில் எழுந்து தொழுவதில் (அதாவது, தஹஜ்ஜுத் தொழுகை) நம்பிக்கை உள்ளவர், அவர் அதை (இரவின்) இறுதியில் நிறைவேற்றட்டும். ஏனெனில் இரவின் இறுதியில் ஓதுதல் சாட்சியளிக்கப்படுகிறது*, அதுவே சிறந்தது.