"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரக்அத்களைக் கூட்டியோ குறைத்தோ தொழுதார்கள். அவர்கள் தஸ்லீம் கொடுத்தபோது, (அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே, தொழுகை தொடர்பாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'தொழுகை தொடர்பாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால், நான் உங்களுக்குத் தெரிவித்திருப்பேன். மாறாக, நானும் ஒரு மனிதன்தான்; நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறக்கிறேன். உங்களில் ஒருவர் தமது தொழுகையில் சந்தேகம் கொண்டால், சரியானது எதுவெனத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் தமது தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு தஸ்லீம் கொடுத்து, இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்.'"