حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي رَكْعَتَىِ الْفَجْرِ إِذَا سَمِعَ الأَذَانَ وَيُخَفِّفُهُمَا .
'ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாங்கு சப்தத்தைக் கேட்டதும் சுன்னத் (தொழுகை)யின் இரண்டு ரக்அத்துகளைத் தொழுவார்கள்; மேலும் அவற்றைச் சுருக்குவார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதின்மூன்று ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழுவார்கள். அவற்றில் ஐந்து (ரக்அத்கள்) வித்ராக இருந்தன; மேலும் அவர்கள் (அவற்றின் இடையில்) உட்காராமல், (ஸலாம் கொடுப்பதற்காக) இறுதியில்தான் உட்காருவார்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ
أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ وِسَادَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي يَتَّكِئُ عَلَيْهَا مِنْ
أَدَمٍ حَشْوُهَا لِيفٌ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்த தலையணை தோலினால் ஆனதாகவும், பேரீச்சை நாரினால் திணிக்கப்பட்டதாகவும் இருந்தது.