أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ عَمِّهِ، يَزِيدَ بْنِ ثَابِتٍ : أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ، فَرَأَى قَبْرًا جَدِيدًا فَقَالَ : " مَا هَذَا " . قَالُوا : هَذِهِ فُلاَنَةُ مَوْلاَةُ بَنِي فُلاَنٍ، فَعَرَفَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَاتَتْ ظُهْرًا وَأَنْتَ نَائِمٌ قَائِلٌ، فَلَمْ نُحِبَّ أَنْ نُوقِظَكَ بِهَا . فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَّ النَّاسَ خَلْفَهُ وَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا ثُمَّ قَالَ : " لاَ يَمُوتُ فِيكُمْ مَيِّتٌ مَا دُمْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلاَّ آذَنْتُمُونِي بِهِ، فَإِنَّ صَلاَتِي لَهُ رَحْمَةٌ " .
யஸீத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வெளியே சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு புதிய கப்ரைக் கண்டார்கள். "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இவர் பனூ இன்னாரின் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணான இன்னார்" என்று கூறினார்கள். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். (மேலும் தோழர்கள்), "அவர் லுஹர் (நண்பகல்) நேரத்தில் இறந்துவிட்டார். தாங்கள் அப்போது (நண்பகல்) தூங்கிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே தங்களை (அவருடைய ஜனாஸா தொழுகைக்காக) எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) நின்றார்கள்; மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றார்கள். அவர்கள் அப்பெண்ணுக்காக நான்கு தக்பீர்கள் கூறினார்கள். பிறகு, "நான் உங்களிடையே இருக்கும் காலமெல்லாம் உங்களில் எவரேனும் இறந்துவிட்டால், அது பற்றி எனக்குத் தெரிவியுங்கள். ஏனெனில், அவருக்காக நான் செய்யும் தொழுகை (அவருக்கு) ஓர் அருட்கொடையாகும் (ரஹ்மத்)" என்று கூறினார்கள்.