حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تُوُفِّيَ وَهْوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ مِثْلَهُ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறுபத்து மூன்று வயதாக இருந்தபோது வஃபாத்தானார்கள் (இறப்பெய்தினார்கள்). (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (அஸ்-ஸுஹ்ரி) கூறுகிறார்: ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்களும் இதே போன்றே எனக்கு அறிவித்தார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறுபத்து மூன்று வயதை அடைந்திருந்த நிலையில் (இவ்வுலகை விட்டுப்) பிரிந்தார்கள். இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்களும் இது போன்றே எனக்கு அறிவித்தார்.