وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ جَعْفَرٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا قَالَ: { لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ -حِينَ قُتِلَ- قَالَ اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا, فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ } أَخْرَجَهُ الْخَمْسَةُ, إِلَّا النَّسَائِيّ َ [1] .
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ஜஃபர் (ரழி) அவர்களின் மரணச் செய்தி எங்களுக்குக் கிடைத்தபோது; அவர் முஃதா போரில் கொல்லப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜஃபருடைய குடும்பத்தாருக்குச் சிறிது உணவு தயார் செய்யுங்கள், ஏனெனில், அவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அவர்களை (வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதவாறு) நிலைகுலையச் செய்துவிட்டது."
அன்-நஸாயீயைத் தவிர ஐந்து இமாம்களால் இது அறிவிக்கப்பட்டுள்ளது.