அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: மதீனாவில் பிறந்தவர்களில் ஒருவர் அங்கேயே இறந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்காக (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர்கள், 'இவர் தாம் பிறந்த இடத்தை விடுத்து வேறு எங்காவது இறந்திருக்கக் கூடாதா?' என்று கூறினார்கள். அதற்கு அங்கிருந்தவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! அது ஏன்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தாம் பிறந்த இடத்தை விடுத்து வேற்றூரில் இறந்தால், அவர் பிறந்த இடத்திலிருந்து அவரது தடயத்தின் இறுதிவரை (அதாவது, அவர் இறந்த இடம் வரை) சுவனத்தில் அவருக்காக (நற்கூலி) அளவிடப்படும் (அவரது சுவனத்தில் இடம் விசாலமாக்கப்படும்).