அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து (வேளைத்) தொழுகைகளும், ஒரு ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆவும், ஒரு ரமழானிலிருந்து அடுத்த ரமழானும், பெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளும் பட்சத்தில், அவற்றுக்கு இடைப்பட்ட (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.