நுஃமான் (ரழி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியபோது கூறியதாவது: (ஹஜ்ரத்) உமர் (ரழி) அவர்கள், இவ்வுலகப் பொருட்களிலிருந்து மக்களுக்குக் கிடைத்தவற்றைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன்; அவர்கள் தம் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு மட்டமான பேரீச்சம்பழத்தைக் கூட பெற முடியாமல் நாள் முழுவதும் (பசியால்) துடித்துக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَلْتَوِي فِي الْيَوْمِ مِنَ الْجُوعِ مَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلأُ بِهِ بَطْنَهُ .
நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; அவர்கள் ஒரு நாளில் பசியின் காரணமாக (வயிற்றைப் பிடித்துக்கொண்டு) துடித்துக்கொண்டிருந்தார்கள். தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்குத் தரக்குறைந்த பேரீச்சம்பழங்களைக் கூட அவர்களால் காண முடியவில்லை.’”
நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் உரை நிகழ்த்தும்போது கூறியதாவது:
மக்கள் (தற்போது) அடைந்துள்ள உலகச் செல்வங்களைக் குறித்து உமர் (ரழி) அவர்கள் நினைவுகூர்ந்துவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிற்றை நிரப்புவதற்காக மிகக் குறைந்த ரகப் பேரீச்சம்பழங்களைக் (தகல்) கூடப் பெறமுடியாமல், பகல் முழுவதும் (பசியினால்) சுருண்டு கிடப்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஹஸன் (இதன் அறிவிப்பாளர் தொடர் நல்லதாகும்)