உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களுக்கு அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு பூமியில் கொள்ளைநோய் (தாஊன்) பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அதில் நுழையாதீர்கள். நீங்கள் ஒரு பூமியில் இருக்கும்போது அங்கு அது (கொள்ளைநோய்) ஏற்பட்டால், அங்கிருந்து வெளியேறாதீர்கள்."
(ஹபீப் இப்னு அபீ தாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் (இப்ராஹீம் இப்னு சஅத் அவர்களிடம்), "உஸாமா (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களுக்கு அறிவிக்க, அதை சஅத் (ரலி) அவர்கள் மறுக்காமல் இருந்ததை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்றார்.