அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக அல்லாஹ் அவருடைய முகத்தை நரக நெருப்பிலிருந்து எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்துவான்."