அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர், காலம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாவார்.’ பின்னர், அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது வேதத்தில் உண்மையையே கூறினான்: யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ, அவருக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மைகள் உண்டு.