'ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியர்களுக்கிடையில் (தங்களின் நேரத்தை) சமமாகப் பங்கிட்டு வந்தார்கள். பின்னர் அவர்கள் கூறுவார்கள்: 'யா அல்லாஹ், இது என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் நான் செய்த பங்கீடாகும். எனவே, உன் கட்டுப்பாட்டில் உள்ள, என் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தில் என்னைக் குற்றம் பிடித்துவிடாதே.'"
ஹம்மாத் பின் ஸைத் இதனை முர்ஸல் வடிவத்தில் அறிவித்தார்கள்.