حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ
أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ
وَكَانَتْ تَأْتِينِي صَوَاحِبِي فَكُنَّ يَنْقَمِعْنَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ فَكَانَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم يُسَرِّبُهُنَّ إِلَىَّ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் பொம்மைகளுடன் விளையாடுவேன். என்னுடைய விளையாட்டுத் தோழிகள் என்னிடம் வருவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் (அவரது கண்ணியத்தின் காரணமாக) ஒதுங்கிக்கொள்வார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களை என்னிடம் (விளையாட ஊக்குவித்து) அனுப்பிவைப்பார்கள்.