ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் எனக்கு மும்முறை தலாக் கூறிவிட்டார். மேலும், (நான் தங்கியிருக்கும் இடத்தில்) எனக்குள் அத்துமீறி நுழையப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினேன். எனவே, (வேறிடத்திற்கு) மாறிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவர் மாறிச் சென்றார்.