இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(ஒருவர் எதையேனும் தனக்கு) ஹராம் (விலக்கப்பட்டதாக) ஆக்கிக்கொள்வது குறித்து, "அவர் (அதற்குப்) பரிகாரம் செய்ய வேண்டும்" என்று கூறினார்கள். மேலும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், "{லகத் கான லகும் ஃபீ ரசூலில்லாஹி உஸ்வத்துன் ஹஸனா} - உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(தமக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றை) ஹராமாக்கிக் கொள்வது, பரிகாரம் செய்யப்பட வேண்டிய ஒரு சத்தியமாகும்” என்று கூறினார்கள். மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “{லக்கத் கான லகும் ஃபீ ரசூலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா}” (நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது) என்று கூறினார்கள்.