இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

938 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تُحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلاَ تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا إِلاَّ ثَوْبَ عَصْبٍ وَلاَ تَكْتَحِلُ وَلاَ تَمَسُّ طِيبًا إِلاَّ إِذَا طَهُرَتْ نُبْذَةً مِنْ قُسْطٍ أَوْ أَظْفَارٍ ‏ ‏ ‏.‏
உம் அதிய்யா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"ஒரு பெண், தன் கணவனுக்காக நான்கு மாதங்களும் பத்து நாட்களும் தவிர, (வேறு) இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. மேலும் அவள், ‘அஸ்ப்’ (எனும் யமன் நாட்டுப் பட்டைக் கோடுகளுடைய, அலங்காரமற்ற) ஆடையைத் தவிர, சாயமிடப்பட்ட ஆடையை அணியக்கூடாது; கண்ணுக்கு மை இடக்கூடாது; நறுமணத்தைத் தொடக்கூடாது; ஆயினும், அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்போது ‘குஸ்த்’ அல்லது ‘அழ்ஃபார்’ (எனும் நறுமணப் பொருட்களில்) சிறிதளவைப் பயன்படுத்துவதைத் தவிர."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح