அல்-பரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் ‘சூரத்துல் கஹ்ஃப்’ ஓதிக்கொண்டிருந்தார். அவரது அருகே இரண்டு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு குதிரை இருந்தது. அப்போது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்துகொண்டது. அது சுழன்று அவரை நெருங்கத் தொடங்கியது. அதைக் கண்டு அவரது குதிரை மிரளத் தொடங்கியது. அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப்பற்றித் தெரிவித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் அமைதி (சகீனா); குர்ஆனுக்காக அது இறங்கியது” என்று கூறினார்கள்.
அல்-பரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ‘அல்-கஹ்ஃப்’ (அத்தியாயத்தை) ஓதினார். வீட்டில் ஒரு பிராணி இருந்தது. அது மிரளத் தொடங்கியது. அவர் பார்த்தபோது ஒரு மூடுபனி அல்லது மேகம் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டார். அவர் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், "இன்னாரே! ஓதுங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதப்படும்போது அல்லது குர்ஆனுக்காக இறங்கிய ‘ஸகீனா’ (அமைதி) தான் அது" என்று கூறினார்கள்.