ரஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹாகலா மற்றும் முஸாபனாவைத் தடை செய்தார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: "(முறையாகப்) பயிரிடுபவர்கள் மூவரே: (சொந்த) நிலம் உடைய ஒரு மனிதர், அவர் அதனைப் பயிரிடுகிறார்; (பயிரிடுவதற்காக) நிலம் வழங்கப்பட்ட ஒரு மனிதர், அவர் தமக்கு வழங்கப்பட்டதைப் பயிரிடுகிறார்; தங்கம் அல்லது வெள்ளிக்கு (ஈடாக) நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த ஒரு மனிதர்."