இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3800ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ، سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ مِلْحَفَةٌ، مُتَعَطِّفًا بِهَا عَلَى مَنْكِبَيْهِ، وَعَلَيْهِ عِصَابَةٌ دَسْمَاءُ حَتَّى جَلَسَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ ‏ ‏ أَمَّا بَعْدُ، أَيُّهَا النَّاسُ، فَإِنَّ النَّاسَ يَكْثُرُونَ وَتَقِلُّ الأَنْصَارُ، حَتَّى يَكُونُوا كَالْمِلْحِ فِي الطَّعَامِ، فَمَنْ وَلِيَ مِنْكُمْ أَمْرًا يَضُرُّ فِيهِ أَحَدًا أَوْ يَنْفَعُهُ، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيئِهِمْ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோள்களைச் சுற்றிப் போர்வையொன்றைப் போர்த்திக்கொண்டும், தம் தலையில் எண்ணெய்ப்பசையுள்ள (கருப்புத்) துணியைக் கட்டிக்கொண்டும் வெளியே வந்து, மிம்பரில் (சொற்பொழிவு மேடையில்) அமர்ந்தார்கள். பிறகு அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

"மக்களே! (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த) பிறகு, மக்கள் பெருகிக்கொண்டே போவார்கள்; ஆனால் உணவில் உள்ள உப்பைப் போன்று (சொற்பமாக) ஆகும் வரை அன்சாரிகள் குறைந்து கொண்டே போவார்கள். எனவே, உங்களில் யார் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கவோ நன்மை செய்யவோ முடிகின்ற ஓர் அதிகாரத்தைப் பெறுகிறாரோ, அவர் அவர்களில் (அன்சாரிகளில்) நன்மை புரிபவரிடமிருந்து (நன்மையை) ஏற்றுக்கொள்ளட்டும்; அவர்களில் தவறிழைப்பவரை மன்னிக்கட்டும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح