ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதனை நான் செவியுற்றேன்: எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைந்தார். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணை கற்பித்தவராக அல்லாஹ்வை சந்தித்தாரோ, அவர் நரக நெருப்பில் நுழைந்தார்.