அபூ உமாமா பின் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனது தூதரும், பொறுப்பாளர் இல்லாதவருக்குப் பொறுப்பாவார்கள். மேலும், வாரிசுகள் இல்லாதவருக்குத் தாய்மாமன் வாரிசாவார்' என்று கூறினார்கள்' என (எழுதப்பட்ட) ஒரு கடிதத்துடன் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் என்னை அபூ உபைதா (ரழி) அவர்களிடம் அனுப்பினார்கள்."