முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்:
"சர்வ வல்லமையும், மேன்மையும் மிக்க அல்லாஹ்வின் பாதையில், ஒரு பெண் ஒட்டகத்தின் இரு கறவைகளுக்கு இடைப்பட்ட நேரமளவிற்கு எவர் போரிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. எவர் (ஜிஹாதில்) கொல்லப்பட வேண்டும் என்று தனது இதயத்திலிருந்து மனப்பூர்வமாக அல்லாஹ்விடம் கேட்கிறாரோ, பிறகு அவர் இறந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டாலும் சரி, அவருக்கு ஒரு ஷஹீதின் நற்கூலி உண்டு. அல்லாஹ்வின் பாதையில் எவர் காயப்படுத்தப்படுகிறாரோ, மறுமை நாளில் (அவருடைய) அந்தக் காயம் மிக அதிகமாக இரத்தம் வழிந்த நிலையில் வரும்; ஆனால் அதன் நிறம் குங்குமப்பூவின் நிறத்தைப் போலவும், அதன் மணம் கஸ்தூரியின் மணத்தைப் போலவும் இருக்கும். அல்லாஹ்வின் பாதையில் எவர் காயப்படுகிறாரோ, அவர் மீது ஷஹீதுகளின் முத்திரை இருக்கிறது."