ஃபுகைம் அல்-லக்மீ அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம், “தாங்கள் முதியவராக இருக்கும் நிலையில், இந்த இரண்டு இலக்குகளுக்கு மத்தியில் (அடிக்கடி) சென்று வருவது தங்களுக்குச் சிரமமாக இருக்கும்” என்று கூறினார்.
அதற்கு உக்பா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு சொல்லுக்காக இல்லாவிட்டால், நான் இச்சிரமத்தை மேற்கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்.
ஹாரித் கூறினார்: நான் இப்னு ஷமாஸாவிடம், “அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “(நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா (ரலி) கூறினார்கள்:) யார் வில்வித்தையைக் கற்றுக்கொண்டு பின்னர் அதைக் கைவிடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; அல்லது அவர் மாறு செய்துவிட்டார்” என்று கூறினார்.