உம்மு அத்திய்யா அல்-அன்சாரிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்துகொண்டேன்.
நான் அவர்களின் பயண உடைமைகளைப் பாதுகாத்துக்கொண்டு பின்தங்கியிருப்பேன்; அவர்களுக்கு உணவு சமைத்து, காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து, நோயுற்றவர்களைப் பராமரித்து வந்தேன்.