நான் என் தந்தையிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அபூபக்கர் (ரழி)” என்றார்கள். பிறகு நான், “அவருக்கு அடுத்து யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உமர் (ரழி)” என்றார்கள். அவருக்கு அடுத்து யார் என்று கேட்பதற்கு, அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களைக் கூறிவிடுவார்களோ என நான் அஞ்சி, “என் தந்தையே! அடுத்து நீங்கள் தானே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் முஸ்லிம்களில் ஒரு மனிதன் மட்டுமே” என்றார்கள்.